சென்னை கமிஷனர் அலுவலகத்தில் போலீசாருக்கு சர்க்கரை-ரத்த அழுத்த பரிசோதனை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மருத்துவக்குழுவினர் போலீசாருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டனர்.
சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர் நாராயணசாமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் போலீசாருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் போலீசார், அமைச்சு பணியாளர்கள் என 300 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன், எஸ்.என்.சேஷசாயி, பெரியய்யா, எம்.டி.கணேசமூர்த்தி உள்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story