ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த நகைக்கடைகளில் வருமான வரி சோதனை
புதுச்சேரியில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் தங்கம் மற்றும் வெள்ளி நகை கடைகள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் நேற்று காலை சுமார் 9 மணிக்கு வந்தனர். அப்போது அந்த கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு கடைக்கு வரும்படி அழைத்தனர். அவர் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
12 மணி நேரம்
இந்த சோதனையின்போது கடைகளின் ஷட்டர் பாதி அளவு அடைக்கப்பட்டு இருந்தது. வருமான வரி சோதனை நடத்தப்படுவது தெரியாமல் வழக்கம் போல் வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு கடைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 2 கடைகளிலும் இரவு 9.30 மணி வரை சோதனை நடந்தது. அதாவது 12.30 மணி நேரம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்
ஸ்ரீலட்சுமி ஜூவல்லரியின் கிளை கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேணுகோபால்பிள்ளை தெருவில் இயங்கி வருகிறது. இந்த நகைக்கடை முன்பு நேற்று மாலை 3.30 மணிக்கு புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அந்த கடைக்குள் நுழைந்து, வருமான வரித்துறையினர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கடையின் கதவை உள்பக்கமாக பூட்டினர். பின்னர், கடையில் உள்ள ஆவணங்கள், இருப்பு நகைகள் உள்ளிட்டவைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.
திடீரென நடைபெற்ற இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story