அண்ணனை அடித்துக்கொன்ற தொழிலாளி மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
தென்காசி அருகே தனது மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி இரும்பு கம்பியால் அண்ணனை அடித்துக் கொன்றார்.
தென்காசி,
தென்காசி அருகே தனது மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி இரும்பு கம்பியால் அண்ணனை அடித்துக் கொன்றார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லோடு ஆட்டோ டிரைவர்நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள திருவெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மகன் கவிதாஸ்(வயது 35), லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவருடைய தம்பி ராஜா(23). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார். விவேகானந்தனுக்கு சொந்தமான வீடு ஒன்று இலத்தூரில் உள்ளது. அந்த வீட்டில்தான் கவிதாஸ் தனியாக வசித்து வந்தார். சில நேரங்களில் மட்டும் திருவெற்றியூருக்கு சென்று தன்னுடைய பெற்றோரை பார்த்து வருவது வழக்கம்.
கள்ளத்தொடர்புகவிதாஸ், திருவெற்றியூர் வரும்போது தன்னுடைய தம்பி மனைவியை சந்தித்து பேசுவது வழக்கம். இந்த சந்திப்பு நாளடைவில் இவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு ராஜாவுக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக அண்ணன்–தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு ராஜா தனது அண்ணனிடம் கூறி வந்தார். ஆனால் அதையும் மீறி அவர் தன மனைவியுடன் சந்தித்து வந்ததால் ராஜா மிகுந்த ஆத்திரம் அடைந்தார். மேலும் ராஜாவுக்கும், அவருடைய மனைவிக்கு இடையேயும் இதுகுறித்து தகராறு ஏற்பட்டு வந்தது.
இரும்பு கம்பியால் அடித்துக்கொலைநேற்று முன்தினம் மாலையில் கவிதாஸ் தன்னுடைய பெற்றோரை பார்க்க திருவெற்றியூருக்கு சென்றார். அப்போது அவர் தம்பி மனைவியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ராஜாவுக்கும், கவிதாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜா, அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கவிதாசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கவிதாஸ் சம்பவ இடத்திலேயே பிணமானார். அண்ணன் இறந்து விட்டதை அறிந்ததும் ராஜா அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்த இலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கவிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வலைவீச்சுஇந்த கொலை தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அண்ணனை, தம்பி அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.