மாணவர்களுக்கு அறிவியல் செயல்திறன் பயிற்சி முகாம் ஆள் இல்லாத ஹெலிகாப்டர் பறக்கவிட்டு விளக்கம்


மாணவர்களுக்கு அறிவியல் செயல்திறன் பயிற்சி முகாம்  ஆள் இல்லாத ஹெலிகாப்டர் பறக்கவிட்டு விளக்கம்
x
தினத்தந்தி 11 Nov 2017 2:30 AM IST (Updated: 11 Nov 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு அறிவியல் செயல் திறன் பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு அறிவியல் செயல் திறன் பயிற்சி முகாம் நடந்தது.

பயிற்சி முகாம்

கோவை ஏ.பி.ஜே.வி‌ஷன்2020 அமைப்பு சார்பில் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் அறிவியல் செயல் திறன் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அறிவியல் செயல்திறன் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில் ஏ.பி.ஜே.வி‌ஷன் 2020 அமைப்பை சேர்ந்த விஜயராஜகுமார் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் விளக்கம் அளித்தனர்.

ஆள் இல்லாத விமானம்

அப்போது, ஆள் இல்லாத விமானம் எப்படி பறக்க வைக்கப்படுகிறது, அதன் செயல் திறனை தரையில் இருந்து எப்படி கட்டுப்படுத்துவது, ஏவுகனையின் செயல்பாடுகள், செயற்கைகோள்கள் எவ்வாறு விண்ணில் செலுத்தப்படுகிறது, ரோபோக்கள் மற்றும் மின்னணு எந்திரங்கள் தயாரிப்பு, பயன்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திரளான மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story