வருமான வரித்துறை அதிகாரிகளையும் சோதனை செய்ய வலியுறுத்தி போலீசாருடன் திவாகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
வருமான வரித்துறை அதிகாரிகளையும் சோதனை செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திவாகரன் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி,
சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 1,600 அதிகாரிகள் ஈடுபட்டனர். தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன் வீடு, மற்றும் சசிகலாவின் உறவினர்கள் மகாதேவன், டாக்டர்.வெங்கடேஷ், மற்றும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரன் வீடு உள்பட 7 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் கல்லூரியிலும் நேற்றுமுன்தினம் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடு, கல்லூரி உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
இதன்படி மன்னார்குடி அருகே மன்னை நகர் பகுதியில் உள்ள திவாகரன் வீடு, சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் பண்ணை வீடு, மன்னார்குடியில் உள்ள திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.(அம்மா அணி) செயலாளர் எஸ்.காமராஜ் வீடு, கீழத்திருப்பாலக்குடியில் உள்ள திவாகரன் கல்லூரி ஊழியர் விநாயகத்தின் வீடு, நீடாமங்கலம் அருகே புள்ளவராயன்குடிகாட்டில் உள்ள திவாகரன் ஆதரவாளர் அக்ரி ராஜேந்திரன் வீடு ஆகிய 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
முன்னதாக சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் அதிகாரிகள் சோதனை நடத்த சென்ற போது வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியில் இருந்து சில ஆவணங்களுடன் கூடிய பைகளை உள்ளே கொண்டு செல்ல முயற்சிப்பதாக கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை அதிகாரிகளையும் சோதனை செய்ய வேண்டும் என திவாகரன் ஆதரவாளர்கள் கூறினர். மேலும் அதிகாரிகள் வந்த காரை மறித்து அங்கு நின்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் திவாகரன் ஆதரவாளர்களை சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு கல்லூரிக்குள் நடந்து சென்று சோதனை நடத்தினர். இந்தநிலையில் கல்லூரி முன் கூடியிருந்த திவாகரன் ஆதரவாளர்களான நாகை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் சந்திரமோகன், பழனிசாமி உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைப்போல சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீடு முன்பு கூடியிருந்த திவாகரனின் ஆதரவாளர்களான முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜ மாணிக்கம், மன்னார்குடி நகர அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரான ஆனந்தராஜ் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் எற்றி கொண்டு சென்றனர்.

Related Tags :
Next Story