சென்னை சென்டிரலில் ஓடும் பஸ்சில் நகைக்கடை ஊழியரிடம் 1 கிலோ தங்கம் திருட்டு
சென்னை சென்டிரலுக்கு பஸ்சில் வந்த நகைக்கடை ஊழியரிடம் 1 கிலோ தங்கம் திருட்டு.
ராயபுரம்,
சென்னை கொருக்குப்பேட்டை, ஜோஷ்வா கார்டனை சேர்ந்தவர் வித்தேஷ் (வயது 37). இவர், யானைக்கவுனி, என்.எஸ்.போஸ் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், ஐதராபாத்துக்கு சென்று 1 கிலோ 8 கிராம் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு சென்னைக்கு பஸ்சில் வந்தார். சென்னை சென்டிரலுக்கு வந்த உடன் பையை பார்த்த போது அதில் வைத்து இருந்த 1 கிலோ 8 கிராம் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பஸ்சில் வரும் போது மர்மநபர்கள் நைசாக அந்த தங்க நகைகளை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வித்தேஷ் அளித்த புகாரின்பேரில் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்மையிலேயே நகைகள் திருடுப்போனதா? அல்லது வித்தேஷ், நகைகளை மறைத்து வைத்து விட்டு திருடு போனதாக நாடகம் ஆடுகிறாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story