மும்பையில் எலக்ட்ரிக் பஸ் சேவை: ஆதித்ய தாக்கரே தொடங்கி வைத்தார்


மும்பையில் எலக்ட்ரிக் பஸ் சேவை: ஆதித்ய தாக்கரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Nov 2017 5:00 AM IST (Updated: 11 Nov 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் எலக்ட்ரிக் பஸ் சேவையை ஆதித்ய தாக்கரே நேற்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மும்பை,

மும்பையில் எலக்ட்ரிக் பஸ் சேவையை ஆதித்ய தாக்கரே நேற்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

எலக்ட்ரிக் பஸ்கள்

மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் பஸ்களை இயக்கி வருகிறது. இந்த பஸ் சேவைகளை மின்சார ரெயில் சேவைகளுக்கு அடுத்தபடியாக சுமார் 30 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மும்பையில் இயக்குவதற்காக தலா ரூ.1 கோடியே 61 லட்சம் செலவில் 4 எலக்ட்ரிக் பஸ்களை பெஸ்ட் குழுமம் வாங்கி உள்ளது.

இந்த பஸ்கள் நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதையொட்டி வடலா பணிமனையில் நடந்த விழாவில், மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் முன்னிலையில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே எலக்ட்ரிக் பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

200 கி.மீ. வரை செல்லும்

மும்பையில் முதன் முறையாக இயக்கப்படும் எலக்ட்ரிக் பஸ்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் வரை செல்லும் திறன் கொண்டவை. இந்த பஸ்களில் 31 இருக்கைகள் உள்ளன. பஸ்சில் 6 இடங்களில் செல்போன்களை சார்ஜ் போட்டு கொள்ளும் வசதிகள் உள்ளது.

இந்த எலக்ட்ரிக் பஸ் சேவைகள் பேக்பே டெப்போ– சி.எஸ்.எம்.டி., சி.எஸ்.எம்.டி.– பங்குச்சந்தை, சர்ச்கேட்– கேட்வே ஆப் இந்தியா, அகில்யாபாய் கோல்கர் சவுக்– என்.சி.பி.ஏ., அகில்யாபாய் கோல்கர் சவுக்– பிரி பிரெஸ் ஜர்னல் மார்க், போர்ட் பெர்ரி– சி.எஸ்.எம்.டி.(வழி– ரிசர்வ் வங்கி), போர்ட் பெர்ரி– சி.எஸ்.எம்.டி. (வழி– சர்ச்கேட்) ஆகிய 7 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.


Next Story