புழலில் தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
புழலில், தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 46). இவர், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி ஜான்சி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் சேதுராமன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவருடைய மனைவி, தனது குழந்தைகளுடன் சென்னை காசிமேட்டில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் சேதுராமனின் தாயார் ஜெகதீஸ்வரி, வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது படுக்கை அறையில் தனது மகன் சேதுராமன், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், தற்கொலை செய்துகொண்ட சேதுராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீயணைப்பு வீரர் சேதுராமனின், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story