காரில் வந்தவரை தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் கைது


காரில் வந்தவரை தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2017 4:05 AM IST (Updated: 11 Nov 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடி ஊழியர்கள் 3 பேர் கைது.

அச்சரப்பாக்கம், 

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர் என்ற இடத்தில் வாகனங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் சோதனை சாவடி உள்ளது. சென்னை மாங்காட்டை சேர்ந்த பழனி என்பவர் காரில் சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். சுங்கம் வசூலிக்கும் நபர்களிடம் அவர் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதாக புகார் கூறினார்.

இதில் அவருக்கும், ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு 3 ஊழியர்கள் சேர்ந்து பழனியை தாக்கினார்கள். இதுபற்றி பழனி அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் சுங்கச்சாவடி ஊழியர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சர்வேஸ் (வயது 20), சந்தீப் (22), விகேஷ்போரா (20) ஆகிய 3 பேரை வழக்குப்பதிவு கைது செய்து செய்தனர். 

Next Story