8 ஆயிரத்து 92 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
66 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 92 மாணவ-மாணவிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
விருதுநகர்,
சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர் ஆகிய இடங்களில் கலெக்டர் சிவஞானம் தலைமையில், விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சாத்தூர் எஸ்.எச்.என்.எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சாத்தூர் பகுதியில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும், அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் காரியாபட்டி மற்றும்் திருச்சுழி பகுதியில் உள்ள 22 பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் விருதுநகர் பகுதியில் உள்ள 14 பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 8 ஆயிரத்து 92 பேருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
விழாவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:- தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்திய எம்.ஜி.ஆரும், உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்திய ஜெயலலிதாவும் கல்வியின் வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள். மாவட்டத்தில் மட்டும் 2011 முதல் 2017 வரை 6 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 85 ஆயிரத்து 211 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர் வரும் காலங்களில் அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்படும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா ஏழை, எளிய மாணவ-மாணவிகளும் உலகத்தரத்திற்கு ஈடாக கணினி அறிவை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார். அவரின் எண்ணத்தினை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு மாணவர்களின் நலன்களுக்காக அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story