பணியில் அலட்சியமாக செயல்பட்ட 9 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
கதக், பீதர் மாவட்டங்களில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 9 போலீஸ்காரர்கள் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கதக்,
கதக், பீதர் மாவட்டங்களில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 9 போலீஸ்காரர்கள் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மணல் கடத்தல்- சூதாட்டத்துக்கு உடந்தையாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
5 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
கதக் மாவட்டம் கஜேந்திரகடா போலீஸ் நிலையத்தில் மகேஷ், குமாரதிகரி, சந்திர பட்டீல், கனகய்யா ஜயாதாரா, சி.வை.பூஜாரி ஆகியோர் போலீஸ்காரரர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், அந்த பகுதியில் மணல் கடத்தும் கும்பல்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு மணல் கடத்தலை கண்டு கொள்வது இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, துணை போலீஸ் சூப்பிரண்டு குரு மத்தூருக்கு புகார்கள் சென்றன. இதுபற்றி விசாரணை நடத்தியபோது, போலீஸ்காரர்கள் 5 பேரும் தங்களின் பணியில் அலட்சியமாக செயல்பட்டதோடு, லஞ்சம் வாங்கி கொண்டு மணல் கடத்தும் கும்பல்களுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கதக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
பீதர்
இதேபோல், பீதர் மாவட்டம் அவுராத் தாலுகா கமலாநகர் போலீஸ் நிலையத்தில் சந்தோஷ், ஞானேஷ்வர், நிங்கப்பா, அனில் ஆகியோர் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள சூதாட்ட கும்பல்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களின் சூதாட்டத்துக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் நடந்த விசாரணையில் போலீஸ்காரரர்களான சந்தோஷ், ஞானேஷ்வர், நிங்கப்பா, அனில் ஆகிய 4 பேரும் பணியில் அலட்சியமாக செயல்பட்டு சூதாட்ட கும்பலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து நேற்று பீதர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story