திருமருகல் ஒன்றிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை அமைச்சர் பேச்சு
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் காரைமேடு, பனங்குடி, திருமருகல், மருங்கூர், சேகல், விற்குடி, வடகரை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. திருமருகல் ஒன்றியம் காரைமேடு ஏரியில் சுற்றுப்புறத்திலிருந்து வடியும் நீர் தடையின்றி வரும் வகையில் வடிகால்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. பனங்குடியில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்படடு வருகிறது. திருமருகல் குளத்தில் கரையோரங்களை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருங்கூர், வடகரை, சேகல் கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விற்குடி மற்றும் ஓக்கூரில் ஆற்றில் நீரோட்டத்தை தடை செய்யும் வகையில் வளர்ந்துள்ள செடி கொடிகள் தூர்வாரப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கோபால் எம்.பி., தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், உதவி கலெக்டர் கண்ணன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருட்டிணன், வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள், நாகை தாசில்தார் ராகவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story