கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Nov 2017 4:00 AM IST (Updated: 12 Nov 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சி பாப்பாரப்பட்டி, ரெங்கசாமி தெரு, ரெயில்வே காலனி, பெருமாள் கோவில் தெரு, வேடியப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். அந்த பகுதியில் வீடு, வீடாக ஆய்வு செய்த அவர், கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது வீடுகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 7 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், நகர சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story