கூவத்தில் தடுப்பு வலைகள் மூலம் தூய்மையாக்கும் பணி தீவிரம்
மிதக்கும் தடுப்பு வலைகள் மூலம் கூவத்தை தூய்மையாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் 6 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை,
பொதுமக்களால் வீசப்படும் பிளாஸ்டிக், குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை சுமந்து வருவதால் கூவம் ஆறு மாசுபட்டு நீர்வழி தடம் பாதித்து வந்தது. மழைநீர் வடிகால்களில் இருந்து வெளியேறும் நீரும் கூவம் ஆற்றில் தான் கலக்கிறது. இதனால் ஆற்றின் முகத்துவாரங்களில் கழிவுப்பொருட்கள் தேங்கி, அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகிறது.
இதையடுத்து சென்னையில் உள்ள நதிகளை புனரமைக்கும் வகையில் ‘சென்னை நதிகள் புனரமைப்பு அறக்கட்டளை’ எனும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக கூவம் நதி புனரமைக்கும் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகர எல்லைக்குள் கூவம் நதியில் மிதக்கும் கழிவுப் பொருட்களை சேகரிக்க தடுப்பு வலைகளை நதியின் குறுக்கே நிறுவி, அதன் மூலம் கூவம் நதியை சீரமைக் கும் பணி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி கூவம் ஆற்றின் குறுக்கே அலுமினியத்தால் உருவான தடுப்பு வலைகள் நிறுவப்படுகின்றன. இந்த தடுப்பு வலைகளில் 50 செ.மீ. இடைவெளியில் ரப்பர் கட்டைகள் வைக்கப்பட்டு உள்ளன. நீரோட்டத்தின் பாதையை அடைக்காமலும், அதேவேளையில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்வகையில் இந்த தடுப்பு வலைகள் நிறுவப்பட்டு உள்ளன. இதன்மூலம் குப்பைகள் தடுத்து நிறுத்தப்பட்டு நீர் தடையின்றி செல்கிறது.
முதல்கட்டமாக எழும்பூர் கமாண்டர் இன் சீப் சாலையில் எத்திராஜ் கல்லூரி பாலத்திற்கு அடியில் ஓடும் கூவம் ஆற்றில் தடுப்பு வலைகள் நிறுவப்பட்டு உள்ளன. அதன்படி நீரோட்டத்துக்கு பாதிப்பு இல்லாமல் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி லாரிகள் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 500 டன் அளவில் மிதக்கும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதனையடுத்து சூளைமேடு ரெயில்வே பாலம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே தடுப்புவலைகள் அமைக்கப்பட்டது. இதேபோல் மேலும் 2 இடங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கூவம் ஆற்றை சீரமைக்கும் நோக்கில் மிதக்கும் தடுப்பு வலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் இடங்களில் மிதக்கும் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் தீவிரமாக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதிகளில் கூவம் ஆற்றில் குப்பைகள் மிதப்பது 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் 6 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story