தபால் துறையின் மெத்தனம் 100 நாட்களுக்கு பிறகு பட்டுவாடா செய்யப்பட்ட தபால்


தபால் துறையின் மெத்தனம் 100 நாட்களுக்கு பிறகு பட்டுவாடா செய்யப்பட்ட தபால்
x
தினத்தந்தி 12 Nov 2017 9:45 PM GMT (Updated: 12 Nov 2017 7:07 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான அஞ்சல் அலுவலகத்தில் பதிவு தபால் உள்பட அனைத்து வகையான தபால்கள் பெறப்படுகின்றன.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான அஞ்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பதிவு தபால் உள்பட அனைத்து வகையான தபால்கள் பெறப்படுகின்றன. அதேபோல் பல பகுதிகளில் இருந்து வரும் தபால்கள் இந்த அஞ்சல் அலுவலகம் மூலமாக பட்டுவாடா செய்யப்படுகின்றன.பள்ளிப்பட்டு பேரித்தெருவை சேர்ந்தவர் சகிலா பானு. இவர் திருத்தணியில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் ஒரு பாலிசி எடுத்துள்ளார். இதற்கான ஆண்டு முதிர்வு தொகை இவரது வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டு அந்த தகவலை தெரிவிக்கும் கடிதம் கடந்த ஆகஸ்டு மாதம் 2–ந்தேதி திருத்தணியில் அஞ்சல் செய்யப்பட்டது.

இந்த தபால் சம்பந்தப்பட்ட பாலிசிதாரர் சகிலா பானுவுக்கு இந்த மாதம் 11–ந்தேதி பட்டுவாடா செய்யப்பட்டது. திருத்தணியில் இருந்து அனுப்பபட்ட அந்த கடிதம் தனக்கு 100 நாட்கள் தாமதமாக வந்தது என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தற்போதைய சூழ்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் தபால்களை போட்டி போட்டுக்கொண்டு சில மணி நேரத்தில் தபால்களை பட்டுவாடா செய்து வருகின்றன. இந்த நிலையில் தபால் துறையில் சாதாரண ஒரு தபால் 100 நாட்களுக்கு பிறகு 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.


Next Story