சுங்குவார்சத்திரத்தில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி


சுங்குவார்சத்திரத்தில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 12 Nov 2017 9:45 PM GMT (Updated: 2017-11-13T00:42:26+05:30)

சுங்குவார்சத்திரத்தில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

வாலாஜாபாத்,

விருதுநகர் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் அழகுமுனுசாமி. இவரது மகன் முகேஷ்கண்ணன் (வயது 24). சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். முகேஷ்கண்ணன் தொழிற்சாலையில் இரவு பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்லும்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக முகேஷ்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விபத்தில் முகேஷ்கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story