தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டை போக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டை போக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் செல்வராஜூ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசின் 8-வது ஊதிய கமிஷன் பரிந்துரையின்படி 1-1-2016 முதல் பணப்பயனுடன் கணக்கிட்டு 21 மாத நிலுவை ஊதியத்தை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
போராட்டம்
தமிழக அரசின் 7-வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-1-2006 முதல் ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பினை களையாமல் 8-வது மாநில ஊதிய கமிஷன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் இழப்பு ஏற்படுகிறது. எனவே மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குறைதீர்க்கும் குழு அமைக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டினை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கருத்தொற்றுமை கொண்ட தோழமை சங்கங்களுடன் சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
ஆங்கில கல்வி
அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இருப்பது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மட்டும் அட்டை வழி கல்வி, பாட புத்தக கல்வி என இரட்டை முறையில் கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். இரட்டை முறை கற்பித்தலை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்வது.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொருளாளர் ரக்சித், மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட தலைவர் ஆனந்த் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story