மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,674 கனஅடியாக குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,674 கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 13 Nov 2017 4:30 AM IST (Updated: 13 Nov 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,674 கனஅடியாக குறைந்தது

மேட்டூர்,

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை திடீரென தீவிரம் அடைந்தும், குறைந்தும் மாறி, மாறி பெய்து வருகிறது. மழை தீவிரம் அடையும் நேரங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், மழை குறையும் நேரங்களில் அணைக்கு நீர் வரத்து குறைந்தும் மாறி, மாறி வந்து கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 424 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 674 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், அணைக்கு நீர்வரத்து இந்த அளவை விட குறையுமானால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 85.19 அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் 85 அடியை எட்டிய நிலையில், 16 கண் மதகுகள் அருகே தண்ணீர் நிரம்ப தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story