பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் மீது பரபரப்பு புகார்
புன்னகாயலில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு கணவரும், உறவினர்களும் காரணம் என கடிதத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி,
ஆத்தூர் அருகே உள்ள புன்னகாயல் மரக்குடி தெருவை சேர்ந்தவர் சகாயம். இவருடைய மனைவி ஜியோனா (வயது 37). இவர்களுக்கு 11 வயதில் சாரா என்ற மகள் உள்ளார். கணவன்- மனைவி 2 பேரும், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இதில் அதிக கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் ஜியோனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் ஜியோனா உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவர் மீது புகார்
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் எழுத்தி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. இதில் தனது சாவிற்கு கணவரும், நெருங்கிய உறவினர்களும் காரணம் என்று எழுதி உள்ளாராம். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story