செங்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு விவசாயி பலி


செங்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு விவசாயி பலி
x
தினத்தந்தி 13 Nov 2017 4:15 AM IST (Updated: 13 Nov 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு விவசாயி பரிதாபமாக இறந்தார்.

செங்கம்,

செங்கம் அருகே சொர்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சின்னதுரை (வயது 30), விவசாயி. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் காய்ச்சல் குறையவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு சின்னதுரையின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மர்ம காய்ச்சலுக்கு விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதிமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story