டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் புழு, பூச்சி கிடந்ததால் பரபரப்பு
அரூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் புழு, பூச்சிகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 6 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் டாஸ்மாக் நிர்வாகம் அரூர்- கடத்தூர் சாலையில் வனப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையை அமைத்தது. இதனால் இந்த கடைக்கு ஏராளமான மதுபிரியர்கள் வந்து மதுபாட்டில்கள் வாங்கி குடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி மதுபிரியர்கள் குடித்த போது அதில் பட்டாம்பூச்சி இறக்கைகள், புழு, பூச்சிகள், பல்லி வால் ஆகியவை கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மதுபிரியர்கள் கடை ஊழியர்களிடம் இதுகுறித்து முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் மதுபிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மதுபிரியர்கள் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மதுபாட்டிலில் புழு, பூச்சிகள் கிடந்த சம்பவம் மதுபிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story