“ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா சொத்து சேர்த்தார்” முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
“வருமானவரி சோதனையால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா சொத்து சேர்த்தார்“ என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை அமைப்பாளருமான கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா மற்றும் குடும்பத்தினரின் வீடுகளில் 3 நாட்கள் நடத்திய வருமானவரி சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அகில இந்திய அளவில் போலி நிறுவனங்கள் மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அதை வருமான வரித்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமாக 60 போலி நிறுவனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் வருகிறது. இந்த நிறுவனங்கள் முறைகேடாக பண பரிமாற்றம் செய்துள்ளது. அரசுக்கு எதிராகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் முறைகேடு செய்தால் வருமானவரி சோதனைக்கு கட்டுப்பட்டு ஆகவேண்டும். இதில் மத்திய, மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை.
சுயமாக தன்னாட்சியுடன், ஆதாரத்துடன் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. சோதனையில் பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளதே அதை உறுதிப்படுத்துகிறது. சசிகலா குடும்பத்தை சேர்ந்த விவேக் என்பவர் என்ன தொழில் செய்கிறார்? அவருக்கு எப்படி ஆயிரம் கோடி மதிப்பில் பீனிக்ஸ் மால் வந்தது?
சாதாரண நிலையில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து, அவரையே ஏமாற்றி நல்லவர்போல் நடித்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை சசிகலா குடும்பம் சேர்த்துள்ளது.
நான் ஒன்றும் காந்தியின் பேரன் இல்லை என தினகரன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி தேசபிதா. அவர் நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பதற்காக சிறை சென்றவர். அவரை ஒப்பிட்டு தினகரன் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
கே.பி.முனுசாமி எங்கள் அணிக்கு வர தயாராக இருந்ததாகவும், தற்போது குற்ற உணர்வோடு இருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார். 1998-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கட்சியிலும், ஆட்சியிலும் எனக்கு கிடைக்கவேண்டிய பல்வேறு பொறுப்பு மற்றும் பதவிகள் வராமல் தடுத்தவர் சசிகலா. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதுகூட, வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு முதலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எங்கு நான் வெற்றி பெற்றுவிடுவேனோ என, பின்னர் பென்னாகரம் தொகுதிக்கு மாற்றியவர் சசிகலாதான். கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளவர்களையும், நல்ல நிர்வாகிகளையும் செயல்படாமல் செய்தவர் சசிகலா. ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த தேர்தலின்போது சீட்டு கொடுக்கக்கூடாது என சசிகலா தடுத்தார். ஆனால் அதையும் மீறிதான் ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத்திற்கு சீட்டு கொடுத்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட பிறகு சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, என்னை பேச அனுமதித்தார். அப்போது நான் அவர் முன்பு பேசும்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சாணியை எடுத்து பிடித்து வைத்ததாலும் கூட அதை பிள்ளையார் என்று நாம் வழிபட்டோம். அதையே சாணி என்று அவர் கூறியதால், நாமும் குப்பையில் தூக்கி எறிந்து விட்டோம் என்று கூறினேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையிலேயே சசிகலாவை விமர்சித்து பேசியவன் நான்.
ஒரு கட்சி தலைமைக்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் விமர்சனங்கள் வரும் என்பதால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் பொறுப்புடன் செயல்படுகின்றனர். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இரண்டு கண்கள். இந்த கண்களை பேணிகாப்பது ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனின் கடமை.
1996-ல் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. தற்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெறும் சோதனை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

Related Tags :
Next Story