உடனடி கேமரா பிரிண்டர்


உடனடி கேமரா பிரிண்டர்
x
தினத்தந்தி 13 Nov 2017 1:16 PM IST (Updated: 13 Nov 2017 1:15 PM IST)
t-max-icont-min-icon

பழமையான போலாரைடு கேமரா பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். புகைப்படம் எடுத்ததும் வெளியே அதன் நகலை பிரிண்ட் அவுட்டாக கொடுத்துவிடும்.

ற்போது போலாரைடு கேமராவை நினைவூட்டும் வகையில் புதிய பிரிண்டர் கருவி அறிமுகமாகி உள்ளது. ஸ்மார்ட்போன்களின் முக்கிய அங்கமாகிப்போன கேமராக்களுடன் இணைந்து இது செயல்படும். பிரிண்ட் பாக்கெட் (Prynt Pocket) எனப்படும் இந்தக் கருவி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுடன் இணைந்து செயல்படக்கூடியது. அறிமுகத்திற்காக ஐபோனுடன் இலவச இணைப்பாக இதை வழங்கினார்கள்.

மை எதுவும் சேர்க்காமல், தெர்மல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் பிரிண்ட் எடுக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 படங்களை பிரிண்ட் போடலாம். கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம் இதை விற்பனைக்கு கொண்டு வருகிறது. வரும் ஏப்ரல் முதல் விற்பனைக்கு கிடைக்கும் இதன் விலை சுமார் 8 ஆயிரம் ரூபாய். 

Next Story