கோத்தகிரி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி அருகே உள்ள கெரடாமட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கெரடாமட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெரடாமட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலூகா செயலாளர் ரஞ்சித் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சுந்தர், மகேஷ் உள்பட கெரடாமட்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story