கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கோரிக்கை


கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2017 10:15 PM GMT (Updated: 13 Nov 2017 7:45 PM GMT)

கந்துவட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளால் ஏழை, எளிய மக்கள் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுஉள்ளது. அந்த மக்களின் வறுமையைப் பயன்படுத்தி கந்துவட்டியின் பெயரால் பணம் பறிக்கும் கும்பல் ரவுடிகளாக வலம் வருகின்றனர்.

சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளால் கந்துவட்டிக்காரர்கள் சிலர் தப்பி விடுகின்றனர். மாவட்ட கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் கந்துவட்டி பாதிப்பு மனுக்களை அவசரகால நடவடிக்கையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வங்கிகளும் முத்ரா கடன் திட்டத்தை விரிவுப்படுத்த உரிய ஏற்பாடு செய்யவேண்டும். மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வங்கிகள் மூலம் போதிய கடன் உதவி வழங்கவேண்டும். கந்துவட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து கடன் பெறுபவர்களுக்கு தக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story