குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல்
மொரப்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொரப்பூர்,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அண்ணல்நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் ஊராட்சி சார்பில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. குப்பைகள் மலை போல் குவிந்து கிடப்பதால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. தற்போது பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மொரப்பூர் - அரூர் சாலையில் சந்தைமேடு என்ற இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணி மற்றும் மொரப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story