கோயம்பேடு மார்க்கெட்டில் சாலை தடுப்பு சுவரை அகற்றக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்
கோயம்பேடு மார்க்கெட்டில் சாலை தடுப்பு சுவரை அகற்றக்கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு,
சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் வாகனம் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக 18 நுழைவாயில்கள் உள்ளன. அதில் மார்க்கெட்டின் எச் பிளாக்கில் உள்ள 8-வது நுழைவுவாயில் எதிரே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ.) சார்பில் சாலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
மார்க்கெட்டின் பிரதான நுழைவுவாயில் எதிரே சாலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதால் மறுமுனையில் உள்ள சாலைக்கு தொழிலாளர்களால் எளிதில் சென்று வர முடியவில்லை. அந்த பகுதியில் இருந்து சுமார் ½ கி.மீ தூரம் சாலை தடுப்பு சுவரில் எந்த வித வழியும் ஏற்படுத்தவில்லை.
8-வது நுழைவு வாயிலின் எதிர் முனையில் உள்ள சாலையில் தான் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை வளாகம் உள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட்டிலிருந்து மளிகை மொத்த விற்பனை வளாகத்திற்கு பொருட்களை தூக்கிச்செல்லும் தொழிலாளர்கள் சுமார் ½ கி.மீ சுற்றி வர வேண்டியது உள்ளது.
8-வது நுழைவு வாயில் எதிரே சாலை தடுப்பு சுவரில் சிறிதளவு பகுதியை அகற்றி எதிர்முனைக்கு செல்வதற்காக வழி ஏற்படுத்தி தரும்படி காய்கறி மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்கள் உள்பட பல தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை 8-வது வாயிலின் முன் ஒன்று திரண்டு வந்தனர். சாலை தடுப்பு சுவரை உடைத்து வழியை ஏற்படுத்தி தருமாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் வணிகர் பிரிவு மாநில துணை செயலாளர் ஜான்சன் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உங்களின் கோரிக்கைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story