திருச்செந்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்


திருச்செந்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்
x
தினத்தந்தி 15 Nov 2017 2:15 AM IST (Updated: 14 Nov 2017 8:50 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.

ஆட்டோ டிரைவர்

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் முத்து நகரை சேர்ந்தவர் சுயம்புராமன் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (29). இவர்களுக்கு லிங்கேஷ் (7) என்ற மகனும், சுவாதி (5) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். சுயம்புராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் சுயம்புராமன் மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதேவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். உடனே சுயம்புராமன் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பலத்த தீக்காயம் அடைந்த கணவன்– மனைவியை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பின்னர், அவர்கள் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதேவி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த தீக்காயம் அடைந்த சுயம்புராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story