செம்பூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மும்பை, செம்பூர் திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் பந்தல் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
மும்பை,
விஷ்ணு கடந்த சில நாட்களுக்கு முன் செம்பூர், நாகவாடி பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு பந்தல் போட்டு அலங்காரம் செய்து இருந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் விஷ்ணுவின் மூத்த மகன் விஷால் பந்தலை பிரித்து கொண்டு இருந்தார். பந்தலில் இருந்த மின்விளக்கை கழற்றிய போது, மின்கசிவு ஏற்பட்டிருந்த வயர் ஒன்று அவரது உடலில் உரசியது. உடனே அவர் அந்த வயரை தட்டி விட்டார்.
அந்த வயர், விஷாலுக்கு கீழே நின்று கொண்டு இருந்த அவரது தம்பி லவ்கேஷ்(வயது 14) மீது விழுந்தது. எனவே சிறுவன் லவ்கேஷ் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.