‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மண்பரிசோதனை ஆய்வு தொடங்கியது
‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய பழைய பஸ் நிலையம் பகுதியில் மண்பரிசோதனை ஆய்வு தொடங்கியது.
சேலம்,
தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்திற்காக சேலம் மாநகராட்சி கடந்த 20.9.2016 அன்று மத்திய நகர்புற அமைச்சகத்தால் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் சேலம் மாநகராட்சியில் இரண்டு பிரிவுகளாக செயல்படுத்தப்பட உள்ளது.
சேலம் மாநகர மக்களின் கருத்து வாக்கெடுப்பின்படியும் சேலம் மாநகரில் பழைய பஸ் நிலையம், வ.உ.சி. மார்க்கெட் அடங்கிய 690 ஏக்கர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இங்கு பகுதி அடிப்படையில் அபிவிருத்தி செய்தல் பிரிவின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதாவது, 100 சதவீதம் குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதியில் வை-பை வசதிகளுடன் கூடிய போக்குவரத்து இணையம் ஏற்படுத்துதல், அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஏற்படுத்துதல், சாலைகள் மாற்றி அமைத்தல், தகவல் பலகைகளை அமைத்தல், மின்சார பஸ்கள், இ-ரிக்ஷா, இ-பஸ், மற்றும் பொலிவுறு பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மண் பரிசோதனை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதல் கட்டமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆய்வு செய்வதற்காக 4 நிறுவனங்களுக்கு பணி வழங்கப்பட்டது. அதாவது, சேலம் பழைய பஸ் நிலையப்பகுதியில் பஸ் உள்ளிட்ட ‘மல்டிலெவல்‘ கார் பார்க்கிங், திருமணிமுத்தாற்றை அழகுப்படுத்தும் திட்டம், வ.உ.சி.மார்க்கெட் ஒழுங்கற்ற முறையில் நெரிசலாக கழிவறை வசதிகூட இன்றி உள்ளது. அங்கு வணிகவளாகம் கட்டி, புதுப்பொலிவுடன் அங்கிருப்பவர்களுக்கே கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பணிகளை முடித்து ஜனவரி(2018) 30-ந் தேதிக்குள் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷிடம் அந்நிறுவனத்தார் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் தனியார் அமைப்பு சார்பில் ஸ்மார்ட் சிட்டி சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய மண்பரிசோதனைக்கான ஆய்வுப்பணி தொடங்கியது. எந்திரம் மூலம் மண் சேகரிப்பதை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் நேரில் பார்வையிட்டார்.
2-ம் கட்டபணி
அப்போது அவர் கூறுகையில்,“தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மண் பரிசோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர், 2-ம் கட்டப்பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும்“ என்றார். அதன் பின்னர் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த ஆணையாளர், பஸ் நிறுத்தங்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்படவுள்ள இடங்களையும், வாகன நிறுத்தும் இடங்களையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது செயற்பொறியாளர் காமராஜ், உதவி பொறியாளர்கள் சுமதி, செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story