தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள இளைய பெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கு ஜெயலட்சுமி (24) என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. வசந்தகுமாருக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வசந்தகுமாருக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பிற்கு சென்ற அவர் அங்கு உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயலட்சுமிக்கும், மீன்சுருட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வசந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story