மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Nov 2017 4:44 AM IST (Updated: 15 Nov 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று மழையால் பாதிக்கப்பட்ட மலையம்பாக்கம், மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், சாதிக் நகர், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை நீரை உடனே அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து கலெக்டர் பொன்னையா கூறுகையில்:-
மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வேகமாக வெளியேற்ற தற்காலிகமாக கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளது.
இந்த பணிகள் உடனடியாக முடிவடையும். பின்னர் நிரந்தரமாக மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்கப்படும்.

தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் கடந்த 2015-ம் ஆண்டே ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. 186 வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடிவடைந்தவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story