அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு


அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2017 2:00 AM IST (Updated: 15 Nov 2017 7:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும், அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

கிராமங்கள் விவரம்

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மறவன்மடத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வசவப்பபுரம், திருச்செந்தூர் தாலுகா தேமாங்குளம், சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூர் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகா ஆவல்நத்தம் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா வைப்பார் பகுதி–1, எட்டயபுரம் தாலுகா வேலிடுபட்டியிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா சங்கம்பட்டியிலும், கயத்தார் தாலுகா திருமலாபுரத்திலும் நடக்கிறது.

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை முகாமில் அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story