ஸ்ரீவைகுண்டம் அருகே ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் பொதுமக்கள் 25 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?
ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளத்தில், ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளத்தில், ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகிறார்கள். பகுதி நேர ரேஷன் கடையாவது தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கை நிறைவேறுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
3 கிலோ மீட்டர் தூரம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லகுளம் பஞ்சாயத்து அரசர்குளம் கிராமத்தில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு ரேஷன் கடை இல்லாததால் இந்த ஊர் மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்று, வல்லகுளம் ரேஷன் கடையில் உணவுப்பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதேபோன்று அரசர்குளம் அருகில் உள்ள வள்ளுவர் காலனி, காமராஜர் தெரு பகுதி மக்களும் நீண்ட தூரம் நடந்து சென்று, வல்லகுளத்தில் உள்ள ரேஷன் கடையில் உணவுப்பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
25 ஆண்டுகளாக கோரிக்கை
எனவே அரசர்குளத்தில் பகுதிநேர ரேஷன் கடை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் இந்த ஊர் மக்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசர்குளத்தில் சுமார் 250 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இங்கிருந்து பெரும்பாலான பெண்கள் காட்டுப்பாதை வழியாக நடந்து சென்று, வல்லகுளம் ரேஷன் கடையில் உணவுப்பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது.
நிறைவேறுவது எப்போது?
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முந்தின நாளில் அரசர்குளத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைப்பதற்காக உணவுப்பொருட்களை லாரியில் கொண்டு வந்து இறக்கினர். பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கொண்டு வந்த உணவுப்பொருட்களை திரும்ப எடுத்து சென்று விட்டனர். பின்னர் தேர்தல் முடிந்து 1½ ஆண்டுகள் ஆகியும், அரசர்குளத்தில் இன்னும் பகுதிநேர ரேஷன் கடை தொடங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்த ஊர் மக்கள். தங்களது 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுவது எப்போது? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Tags :
Next Story