தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்


தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
x
தினத்தந்தி 16 Nov 2017 2:00 AM IST (Updated: 15 Nov 2017 9:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட டவுன் பீடரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட டவுன் பீடரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

இதனால் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வ.உ.சி. மார்க்கெட், மரக்குடி தெரு, தீயணைப்பு நிலைய ரோடு, வி.இ.ரோடு, தெற்கு காட்டன் ரோடு, தபால் தந்தி அலுவலகம் ரோடு, ஜெய்லானி தெரு, தெற்கு புதுத்தெரு, டபிள்யூ.ஜி.சி. ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

மேலும், தூத்துக்குடி கொம்புகாரநத்தம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

எனவே, அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் வடக்கு காரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, சவலாபேரி, செக்காரகுடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், கொம்புகாரநத்தம், செட்டியூரணி, கல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என, தூத்துக்குடி நகர்புற மின் வினியோக செயற்பொறியாளர் தென்னரசு தெரிவித்து உள்ளார்.


Next Story