அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த கவர்னருக்கு அதிகாரம் உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த கவர்னருக்கு அதிகாரம் உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2017 3:45 AM IST (Updated: 16 Nov 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

கவர்னருக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை,

பிரம்மா குமாரிகளின் 80–ம் ஆண்டு விழாவையொட்டி மாரத்தான் ஓட்டம் மதுரை ரிசர்வ் லைன் மாரியம்மமன் கோவில் பகுதியில் நேற்று காலை தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், பிரம்மா குமாரிகள் மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் உமா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டு ஓடினார்கள்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு 30 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் 92 சதவீதம் மழை பெய்துள்ளது. கூடுதல் மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் மிக விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்த உடன் பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். வெள்ள நிவாரண பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று எதிர்கட்சிகள் பேசிவருவது அரசியலுக்காக தான். கோவையில் அரசு அதிகாரிகளுடன் தமிழக கவர்னர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story