விவசாயி வீட்டில் கொள்ளை வழக்கில் வாலிபர் கைது

கொளத்தூர்,
கொளத்தூரை அடுத்த தார்காடு அய்யம்புதூரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். விவசாயி. கடந்த மாதம் 2-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.1 லட்சம், 10 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று கொளத்தூர் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நடுவனேரியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 32) என்பது தெரியவந்தது.யுவராஜ் தொடக்கத்தில் ஜவுளிரக தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கொளத்தூரை அடுத்த கத்திரிப்பட்டியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அய்யம்புதூரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து யுவராஜை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சின்ன சீரகாபாடியைச் சேர்ந்த கேசவன், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பிரபு, ஓசூரைச் சேர்ந்த ரவி, எடப்பாடியைச் சேர்ந்த செல்வம், பெங்களூருவைச் சேர்ந்த நவீன் ஆகியோர் நாமகிரிப்பேட்டை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story