சேலத்தில் தேசிய புத்தக கண்காட்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்
சேலத்தில் தேசிய புத்தக கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தொடங்கி வைத்தார்.
சேலம்,
நேஷனல் புக் டிரஸ்ட், சேலம் மண்டல தமிழ் வளர்ச்சித்துறை, சேலம் மாவட்ட நூலக ஆணைக்குழு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 33-வது தேசிய புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நேற்று சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர்கள் கண்காட்சியில் இடம்பெற்ற புத்தகங்களை பார்வையிட்டனர். இதில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய நூல்களும், இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய நூல்களும் சிறப்பு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான புத்தகங்கள்
மேலும் இந்த புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கணினி, இலக்கியம், திறனாய்வு நூல்கள், வரலாற்று கதைகள், கட்டுரைகள், கவிதை, சட்டநூல்கள், வேளாண்மை, கைத்தொழில், சிறுதொழில்கள், சுயமுன்னேற்ற நூல்கள், அகராதிகள், இலக்கணம், பொது அறிவு, சமையல், எண் கணிதம், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் சிறந்த கல்வி அறிஞர்கள் எழுதிய நூல்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியில் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியிலும், பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடியிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சி தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. மேலும் புத்தக கண்காட்சி 3 மாதம் வரை நடக்கிறது. தொடக்க விழாவில் மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் கணேசன், கிளை மேலாளர் சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story