மன்னார்குடி அருகே மழைநீரில் அழுகிய நெற்பயிர்களை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்


மன்னார்குடி அருகே மழைநீரில் அழுகிய நெற்பயிர்களை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேசம் ஊராட்சிக்குட்பட்ட மரவாக்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி அழுகி வருகின்றன. மரவாக்காடு பகுதியில் மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை நேற்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை கையில் எடுத்து அவரிடம் காட்டினர். சுமார் 150 ஏக்கரில் நெற்பயிர்கள் அழுகியுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜிடம், விவசாயிகள் தெரிவித்தனர். உடனடியாக கட்டேரி வாய்க்காலை தூர்வாரி மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரியும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட முதன்மை செயலாளருமான மணிவாசன், திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளமதிமணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story