வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.
நாகர்கோவில்,
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி குமரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1–10–2017 முதல் 31–10–2017 வரை நடைபெற்றது. இதற்கிடையே வருகிற 30–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் வருகிற 30–ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும்.
இன்று (அதாவது நேற்று) முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான விசாரணை மேற்கொள்வார்கள். மேலும் பொதுமக்கள், புதியதாக பெயர் சேர்ப்பதற்கும், இச்சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்வதற்கு, திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பித்த நபர்களின் படிவங்களின் மீது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்த பணியின்போது, வாக்குச்சாவடி நிலை முகவர்கள், அந்தந்த பாகத்தின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குவதோடு, வாக்காளர் பட்டியல் சீரிய முறையில் செம்மைப்படுத்திட உதவிட வேண்டும் என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் தொடர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 3–ந் தேதி அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 வாக்காளர்கள் உள்ளனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற, சிறப்பு முகாம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களிடமிருந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 16 ஆயிரத்து 576 பேரும், பெயர் நீக்கம் செய்வதற்கு 37 ஆயிரத்து 619 பேரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
தற்போது விண்ணப்பித்த நபர்களின் தகுதியுடைய விண்ணப்பங்கள் உரிய விசாரணைக்கு பின்னர், சேர்க்கப்பட்டு 5–1–2018 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், வாக்காளர் பட்டியல் பாகம் வரிசை எண் விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ–சேவை மையம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலுள்ள அரசு இ–சேவை மையம் மூலம் நேரிலோ அல்லது அவர்களது உறவுமுறை குடும்ப உறுப்பினர்கள் மூலம் உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து, இலவசமாக வண்ண புகைப்பட அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அல்லது புதிய அடையாள அட்டை வேண்டுபவர்கள், வாக்காளர் பட்டியலை தாலுகா அலுவலகத்தில் பார்வையிட்டு உரிய விவரங்களுடன் ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த விதிகளின்படிதான் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் தொடர்பில்லாத நபர்கள் அதிக அளவில் புகைப்பட அடையாள அட்டை கோரினால் வழங்கப்பட மாட்டாது. மேலும் இது குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950–ன்படி சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, அ.தி.மு.க. கட்சி நகர செயலாளர் சந்திரன், தி.மு.க. கட்சி சார்பில் வக்கீல் லீனஸ்ராஜ், காங்கிரஸ் கட்சி சார்பில்சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வம், தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியன், மற்றும் தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story