தியேட்டர் ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூரில், தியேட்டர் ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரத்தை சேர்ந்தவர் தேஜா (வயது 27). இவர், பெரம்பலூரில் எளம்பலூர் ரோட்டிலுள்ள ஒரு தியேட்டரில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த தியேட்டருக்கு வந்த வாலிபர்கள் 2 பேர் அங்கிருந்த தேஜாவிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் சேர்ந்து தேஜாவை சரமாரியாக தாக்கியதோடு அரி வாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெரம்பலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பிரவீன் (26) மற்றும் பெரம்பலூர் அருகே அருமடல் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஜெயக் குமார் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த 2 பேர் மீதும் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
போலீசார் விசாரணையின் போது பிரவீன், ஜெயக்குமார் ஆகியோர் மீது வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் மருவத்தூர், பெரம்பலூர், பாடாலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ச்சியாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் பரிந்துரை செய்தார். அதன் பேரில் பிரவீன், ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த 2 பேரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை பெரம்பலூர் போலீசார் வழங்கினர்.

Related Tags :
Next Story