நீர்வரத்து கால்வாய் சீரமைப்பால் செதுவாலை ஏரி கோடிபோனது
வேலூர் அருகே பாலாற்றில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டதால் செதுவாலை ஏரி நிரம்பி நேற்று கோடிபோனது. பொதுமக்கள் 12 ஆடுகள் வெட்டி வரவேற்றனர்.
வேலூர்,
எனவே பொதுமக்கள் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கால்வாய் சீரமைக்கப்பட்டது. வெட்டுவாணத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக வரும் இந்த நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள இறைவன்காடு, விரிஞ்சிபுரம், வக்கணாவரம் ஆகிய ஏரிகளுக்கும், செதுவாலை ஏரிக்கும் தண்ணீர் வரத்தொடங்கியது.
இதன் மூலம் செதுவாலை ஏரி கடந்த சில நாட்களாக வேகமாக நிரம்பிவந்தது. தண்ணீர் வெளியேறாமல் இருக்க கோடிப்போகும் மதகில் மணல் மூட்டைகளை வைத்து அடைத்துவைத்திருந்தனர். தண்ணீரின் அளவு அதிகமானதால் நேற்று ஏ.பி.நந்தக்குமார் தலைமையில் கோடிபோகும் வழியில் தண்ணீர் திறக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து பொதுமக்கள் 12 ஆடுகள் மற்றும் கோழிகளை வெட்டி பூஜை செய்து தண்ணீரை வரவேற்றனர். தண்ணீர் அதிக அளவு கோடிபோவதால் கிராமத்து இளைஞர்கள் அதில்குதித்து குளித்து விளையாடினர். இந்த ஏரியில் இருந்து கோடிபோகும் தண்ணீர் அருகில் உள்ள சத்தியமங்கலம் ஏரிக்கு செல்கிறது.
Related Tags :
Next Story