மழை காலங்களில் சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது கலெக்டர் வெங்கடேஷ் அறிவுரை


மழை காலங்களில் சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது கலெக்டர் வெங்கடேஷ் அறிவுரை
x
தினத்தந்தி 17 Nov 2017 2:15 AM IST (Updated: 16 Nov 2017 9:15 PM IST)
t-max-icont-min-icon

மழை காலங்களில் பொதுமக்கள், சமைத்த உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி,

மழை காலங்களில் பொதுமக்கள், சமைத்த உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

மழை காலங்களில்...

மழை காலங்களில் பொதுமக்கள் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் காய்ச்சிய குடிநீரையே அருந்த வேண்டும். ஐ.எஸ்.ஐ தர முத்திரை மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட சூடான உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பாதுகாப்பான முறையில் மூடி பயன்படுத்த வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறி வகைகளை சமைக்கும் முன்பு உப்புநீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

சமைத்த உணவு

கார்போஹைட்ரேட் நிறைந்த மற்றும் எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருள்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். உலர் திராட்சை, வறுத்த முந்திரி, கடலை வகைகள், பிஸ்கட்டுகள், பால் பவுடர்கள், ரஸ்க் போன்றவற்றை போதுமான அளவு உட்கொள்ள வேண்டும்.

சமைத்த உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவு பொருட்களை தயாரிக்கும் போதும் சாப்பிடுவதற்கு முன்பும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சாலையோரம் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடக்கூடாது.

புகார்களை தெரிவிக்க...

எளிதில் கிருமி தொற்று ஏற்படக்கூடிய அசைவ உணவுப் பொருட்களை சுத்தமாக கழுவிய பின்பு, உயர் கொதிநிலை அடைந்த பிறகே உணவாகப் பயன்படுத்த வேண்டும். உணவு உபாதைகள், வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் கஞ்சி வகைகளை நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உட்கொள்ள வேண்டும். உணவுப் பொருள்கள் பற்றிய புகார்களை 94440– 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Next Story