கல்லூரி முன்பு நிறுத்தியிருந்த காருக்குள் புகுந்த சாரைப்பாம்பு பழனியில் பரபரப்பு

பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 45). இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று மாலை இவர், பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி முன்பு தனது காரை நிறுத்தியிருந்தார். அப்போது கல்லூரி வளாகத்தில் இருந்து வந்த பாம்பு காரின் அடிப்பகுதியில் நுழைந்தது. இதனை கண்ட சேதுராமன் அங்கிருந்த டிரைவர்களுடன் அதனை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த பாம்பு காரின் இருக்கைக்குள் பதுங்கி கொண்டது. இதனால் அதனை பிடிக்க முடியவில்லை. காருக்குள் பாம்பு நுழைந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பழனியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நிபுணர் நடராஜ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அங்கு விரைந்தார்.
பின்னர் அந்த கார், அருகே உள்ள சர்வீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் காருக்குள் பதுங்கி இருந்த பாம்பை, நடராஜ் லாவகமாக பிடித்தார். அது சாரைப்பாம்பு ஆகும். 6 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட சாரைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை வனத்துறையினர் பழனி அருகே வனப்பகுதியில் விட்டனர்.

Related Tags :
Next Story