கழிவுநீர் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
காரைக்கால் நகராட்சியில் கழிவுநீர் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.
காரைக்கால்,
காரைக்கால் நகரில் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மீது சிமெண்டு பலகைகளால் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் சரிவர சுத்தம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அவற்றின் கீழ் கழிவுப்பொருட்கள் அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை பரப்புகிறது.
பலத்த மழை பெய்யும்போது மழைநீர் வழிந்தோட முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து காரைக்கால் மாதா கோவில் வீதி மற்றும் திருநள்ளாறு ரோட்டில் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள கழிவுநீர் கால்வாய் மீது இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.
மாதா கோவில் வீதியில் தெஸ்தா வீதிசந்திப்பில் இருந்து தொடங்கி காளியம்மன் கோவில் வரையும், திருநள்ளாறு ரோட்டில் பாரதியார் ரோடு சிக்னல் முதல் மாதா கோவில்வீதி வரையும் நகராட்சி ஆணையர் சுதாகர் தலைமையில் போலீசாரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

Related Tags :
Next Story