பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த ஏற்பாடு அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்து வருவதாக செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்து வருவதாக செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தேசிய பத்திரிகையாளர் தின விழாகோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ரோட்டரி சங்கம் சார்பில், தேசிய பத்திரிகையாளர் தின விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் முத்துசெல்வன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.
செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:–
ஓய்வூதியத்தை உயர்த்த...மறைந்த முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2,500–ல் இருந்து ரூ.4,750 ஆகவும் உயர்த்தி வழங்கினார். தற்போது பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குவதற்கு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்து வருகிறார்.
இலவச வீட்டுமனை பட்டாபத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.3½ லட்சமாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கவும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
2–வது குடிநீர் திட்டம்கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகளுக்காக வனத்துறையிடம் அனுமதி பெற்று, ஊத்துப்பட்டி– குருமலை இடையே ரூ.1.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி இரவும் பகலுமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வருகிற 22–ந்தேதிக்குள் நிறைவேற்றி வெள்ளோட்டம் விட ஏற்பாடு செய்யப்படும்.
ஒருவேளை இந்த பணியில் தாமதம் ஏற்பட்டால், அடுத்த மாதம் (டிசம்பர்) கன்னியாகுமரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்– அமைச்சர் வரும்போது, அவர் நேரடியாகவே கோவில்பட்டிக்கு வந்து 2–வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பார்’ என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்விழாவில் ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுனர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி, சங்க துணை தலைவர் ரவிமாணிக்கம், செயலாளர் வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, நாடார் நடுநிலைப் பள்ளி செயலாளர் கண்ணன், பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், இளசை மணியன், பேராசிரியர் ராஜமாணிக்கம்,
அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், நிர்வாகிகள் மூர்த்தி, முருகன், வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை, பழனிகுமார், சவுந்தர்ராஜன், அல்லிகண்ணன், தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.