கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் மகாசத சண்டியாகம் தொடங்கியது
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் உலக மக்களின் நலனுக்காகவும், பக்தர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கவும், தொழில் வியாபாரம் பெருகவும் வேண்டி, மகாசத சண்டியாகம் நேற்று தொடங்கியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் உலக மக்களின் நலனுக்காகவும், பக்தர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கவும், தொழில் வியாபாரம் பெருகவும் வேண்டி, மகாசத சண்டியாகம் நேற்று தொடங்கியது.
காலையில் அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், திரவ்யாகுதி பூர்ணாகுதி, விநாயக பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், முன்னாள் தர்மகர்த்தா தங்க காளிராஜா, கோவில் செயலாளர் மாணிக்கம், பொருளாளர் கணேசன், நாடார் நடுநிலைப் பள்ளி செயலாளர் கண்ணன், ஐ.சி.எம். நடுநிலைப் பள்ளி செயலாளர் ராஜேந்திர பிரசாத் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மகாசத சண்டியாகம், சிறப்பு பூஜைகள், மதியம் 12.30 மணிக்கு நாடார் நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் அன்னதானம் நடக்கிறது.