மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். படங்கள் திரையிட 7 வாகனங்கள் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். படங்கள் திரையிட 7 வாகனங்கள் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Nov 2017 2:30 AM IST (Updated: 18 Nov 2017 9:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். படங்கள் திரையிட 7 வாகனங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். படங்கள் திரையிட 7 வாகனங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திரைப்படங்கள்

தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 22–ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். நடித்த படங்களை மாவட்டம் முழுவதும் திரையிட, அதிநவீன 7 மின்னணு வீடியோ படக்காட்சி வாகனங்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய பஸ்நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது;–

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற பொது தேர்தலின் போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று கூறினார். அதே போல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சாதனைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கு மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மாவட்டம் முழுவதும் திரையிட 7 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனை தொடங்கி வைத்து உள்ளேன். பொதுமக்கள் மற்றும் இளைய தலைலமுறையினர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை புரிந்து கொள்ள இந்த முயற்சி உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அ.தி.மு.க. மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் சின்னதுரை, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story