ராமநதி–ஜம்புநதி இணைப்பு திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
ராமநதி–ஜம்புநதி இணைப்பு திட்டப்பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தென்காசி,
ராமநதி–ஜம்புநதி இணைப்பு திட்டப்பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ராமநதி–ஜம்புநதி இணைப்பு திட்டம் குறித்தும், திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவது குறித்தும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
கூட்டத்தில், நதி நீர் இணைப்பு திட்ட அலுவலர் மகேஸ்வரன், தனி தாசில்தார் பெமினா ரேச்சல், நெல்லை பொதுப்பணித்துறை சிறப்பு திட்டங்கள் கோட்டத்தின் செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் செல்லையா, மணிகண்டன், தாசில்தார்கள் முருகன், சுப்பாராய ஆச்சாரி, வெங்கட்ராமன், நிலஅளவை ஆய்வாளர் பேச்சியப்பன், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம், நகர சபை முன்னாள் துணைத்தலைவர் சுடலை, விவசாய பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.