புதுச்சேரி, மைலர்வாடா ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


புதுச்சேரி, மைலர்வாடா ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:15 AM IST (Updated: 18 Nov 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி, மைலர்வாடா ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பிரசன்னா ராமேசுவரத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. துணை தாசில்தார் திருமூர்த்தி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் ஹேமகுமார் முன்னிலை வகித்தார். வருவாய் அலுவலர் அருணா வரவேற்றார். துயர்துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரே‌ஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 16 பேர் துயர்துடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்கள் அளித்தனர். முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் பிரித்தி, புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மைலர்வாடா ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தனி தாசில்தார் சாந்தி தலைமை தாங்கினார். பள்ளிப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரே‌ஷன்கார்டு, திருமண உதவித்தொகை, ரே‌ஷன்கார்டில் பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள் கோரி 30–க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் ரகுராமன், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், கிராம உதவியாளர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story